இயற்கை மருத்துவத்தில் பூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது.நாம் சமையலில் பெரும்பாலும் பூண்டை பயன்படுத்துவதால் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது.
பூண்டு பால் செய்முறை
பாத்திரத்தில் ஒரு டம்ளர் பாலை எடுத்து கொண்டு அதில் பூண்டைத் தட்டிப் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.பூண்டு நன்கு வெந்ததும் பனங்கற்கண்டு, மிளகுத்தூள், மஞ்சள்தூள் ஆகியவை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து வேண்டும் பின் இறக்கி விட வேண்டும், இப்போது பூண்டு பால் தயார்.தினமும் குடித்து வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது.
பாலில் பூண்டு கலந்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
பூண்டு பாலை குடிப்பதால் சளி மற்றும் காய்ச்சல் பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுபடலாம்.
இடுப்பு வலி, மூட்டு வலி, வாய்வு பிடிப்பு மற்றும் கால் வலி போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு, பூண்டை பாலில் காய்ச்சி குடித்தால் நல்ல பலனைக் கொடுக்கும்.
பூண்டு கலந்த பால் உடல் பருமனை குறைக்கும், இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்கிவிடலாம், இரத்தத்தில் ஏற்படும் கொழுப்புகளை கரைத்து விடுகிறது.