இலங்கை மத்திய வங்கியின் 70 வது ஆண்டின் நிறைவைக் குறிகத்துக் காட்டும் வகையில் தற்போது வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நினைவு குற்றி நாணயம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன்வினால் நேற்று (24ம் திகதி) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த நாணயம் இலங்கை மத்திய வங்கியினது 70 வது ஆண்டு பூர்த்தியை குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட நினைவு நாணயம் ஆகும்.
குறித்த குற்றி நாணயம் 7 பக்க வடிவத்துடன் நிக்கல் பூசப்பட்ட எஃகு மூலம் அழகாக தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் 05 மில்லியன் நாணயங்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 03 ஆம் திகதி தொடக்கம் புழக்கத்தில் வரும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.