சிலாபம் – முன்னேஸ்வரம் ஸ்ரீ முன்னைநாதஸ்சுவாமி ஆலயத்தின் வருடாந்த மாசி மாத மகோற்சவம் இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றதுடன் ஆரம்பமானது.
பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான முன்னேஸ்வர ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று காலை 9.00 மணியளவில் ஆரம்பமானது.
கொடிச்சீலைக்கு விஷேட பூஜைகள் நடைபெற்று மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றம் இடம்பெற்றது. பின்னர் கொடிக்கம்பத்திற்கு அபிஷேகம் நடைபெற்றது.
ஆலய மகோற்சவ நிகழ்வில் சுகாதார வழிகாட்டுதல்களின் படி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.