மூக்குக் கண்ணாடி அணிபவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுவதற்கான சாத்தியப்பாடு 3 மடங்கு குறைவாக காணப்படுகின்றமை ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது .
இந்தியாவில் உள்ள ஆய்வுக் குழுவொன்றினால் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன .
சுமார் 300 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் மூக்குக் கண்ணாடி அணிபவர்கள் குறைந்த அளவில் தமது முகத்தினை தொடுவதன் காரணமாக இவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுவதற்கான சாத்தியம் குறைவாகவே காணப்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஒவ்வொருவரும் சராசரியாக மணித்தியாலம் ஒன்றுக்கு 23 தடவைகளை தனது முகத்தை தொடுவதாகவும் இதில் சராசரியாக 3 தடவைகள் கண்களைத் தொடுகின்றனர் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே , தொடர்ந்து மூக்குக் கண்ணாடி அணிபவர்கள் அடிக்கடி முகம் மற்றும் கண்களை தொடுவதை தவிர்ப்பதன் காரணமாக இவர்களிடத்தில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகும் சாத்தியம் குறைந்த அளவில் காணப்படுவதாக ஆய்வாளர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.