மேல் மாகாணப் பாடசாலைகள் எதிர்வரும் 15ம் திகதி மீள ஆரம்பிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவைப் பணிப்பாளரின் அனுமதியுடன் பாடசாலைகளை திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் இன்று தெரிவித்துள்ளார்.
மாகாணத்தில் காணப்படும் 492 பாடசாலைகளில் 412 பாடசாலைகள் எதிர்வரும் 15ம் திகதி திறக்கப்பட உள்ளது.
எஞ்சிய 80 பாடசாலைகளும் எதிர்வரும் மார்ச் மாதம் 15ம் திகதி திறக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை கருத்திற் கொண்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.