Jet tamil
யாழ்ப்பாணம்

யாழில் பயணத் தடையிலும் இயங்கி வந்த மதுபானசாலை முற்றுகை !!

யாழ் – கோப்பாய் பொலிஸ் பிரிவில் மதுபான சாலை ஒன்று மதுவரித் திணைக்களத்தினால் சீல் செய்யப்பட்டதுடன் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வரும் ஜூன் 7ஆம் திகதிவரை மதுபான சாலைகளை மூட மதுவரி ஆணையாளர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அதனை மீறி மதுபான சாலையைத் திறந்த குற்றச்சாட்டில் அதன் முகாமையாளர், விற்பனையாளரும் அரச சாராயத்தை சட்டத்துக்குப் புறம்பாக வாங்கிய குற்றச்சாட்டில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட  சந்தேக நபர்கள் மூவரும் கோப்பாய் பொலிஸாரிடம் முற்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

யாழில் இடம்பெற்ற சர்வதேச குடும்ப நல உத்தியோகத்தர் தின நிகழ்வு…!

Sinthu

வடக்கு மாகாண துறைசார் வல்லுநர்களுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டி

jettamil

யாழில் மடு அன்னையின் திருச்சொரூப வீதியுலா…

kajee

வலி.வடக்கிலிருந்து யாழ் நகருக்கான புதிய பேருந்து சேவை ஆரம்பம்…!

kajee

தெல்லிப்பழை பாடசாலையில் கார்த்திகைப் பூ விவகாரம் – பொலிஸாருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை…!

kajee

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து : பரிதாபகரமாக பலியான விவசாயி

kajee

Leave a Comment