யாழ்ப்பாண நகரப் பகுதியில் பொலிசாரால் விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுப்பு – பலர் கைது
நாடு முழுவதிலும் பொலிஸ்மா அதிபரின் பணிப்பின் கீழ் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகர் ஜெகத் நிஷாந்தவின் வழிகாட்டுதலில் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகரின் நெறிப்படுத்தலில் கீழ் நேற்று இரவு யாழ்ப்பாண நகர பகுதியில் பொலிசாரால் விசேட போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையப் பகுதி மற்றும் யாழ்ப்பாண நகர்ப்பகுதி வர்த்தக நிலையங்களிலும் யாழ்ப்பாண பொலிசாரினால் மோப்ப நாய்களின் உதவியுடன் விசேட போதைப் பொருள் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.