யாழ் போதனா வைத்திய சாலையில் நிலவும் குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக இரத்த தானம் வழங்க பொதுமக்களை முன்வருமாறு வடமாகாண மருத்துவர் மன்றம் சார்பாக அன்பான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் கொரோனா நிலைமை காரணமாக குருதி கொடையாளர்களினால் ஏற்பாடு செய்யப்படும் குருதி கொடை நிகழ்வுகள் குறைந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலை குருதி வங்கியில் குருதிக்கு மிக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது .
இந்நிலையில் உயிர் காக்கும் உன்னத பணியில் அனைவரையும் அணிதிரளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.