Jet tamil
இலங்கை

நெல்லியடிச் சந்தைக்குள்ளும் புகுந்தது கொரோனா..!

வடக்கில் நேற்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 8 பேர் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 366 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

யாழ்ப்பாணம் பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 462 பேரின் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இதில், யாழ்ப்பாணம் மாநகரசபை எல்லைக்குள் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் அண்மையில் வெளிமாவட்டத்திற்கு சென்று வந்தவர். நோய் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து நேற்று யாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்ற நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதியானது.

நெல்லியடி பொதுச்சந்தையில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

அச்சுவேலி சந்தையில் அண்மையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளரின் குடும்ப உறுப்பினர் ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

மிருசுவில் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அண்மையில் நானாட்டான் ஹட்டன் நஷனல் வங்கியில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட ஒருவரின் குடும்ப உறுப்பினர்களே தொற்றிற்குள்ளாகியுள்ளனர். கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

Related posts

புகையிரத விபத்தில் இருவர் உயிரிழப்பு!

kajee

மதுவரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

kajee

யாழில் இடம்பெற்ற சர்வதேச குடும்ப நல உத்தியோகத்தர் தின நிகழ்வு…!

Sinthu

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வில் கெருடபுராணம் எனும் தலைப்பில் ஆண்மீக உரை

Sinthu

இளம் தலைவர்களை ஒன்றிணைத்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்பத் தயார்! சந்திரிக்கா அதிரடி அறிவிப்பு

jettamil

வடக்கு மாகாண துறைசார் வல்லுநர்களுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டி

jettamil

Leave a Comment