வடமராட்சி வடக்கு பிரதேச செயலராக சிவபாதசுந்தரம் சத்தியசீலன் பதவிகளை பெறுப்பேற்றார்
யாழ்ப்பாணம் – வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலாளராக சிவபாதசுந்தரம் சத்தியசீலன் இன்று காலை தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இன்று காலை மருதடி ஞானவைரவர் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜை வழிபாடுகளை தொடர்ந்து புதிய பிரதேசசெயலாளர் தவில் நாதஸ்வர இசையுடன் செயலகத்திற்கு அழைத்து வரும் நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் முன்னாள் பதில் பிரதேச செயலாளர் ச.சிவசிறி, உதவி பிரதேச செயலாளர் பசுபதி தயானந்தன் உட்பட பதவிநிலை உத்தியோகத்தர்கள் பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் பிரதேசசெயலாளராக கடமையாற்றிய ஆழ்வாப்பிள்ளை சிறி அவர்கள் வடக்கு மாகாண பிரதம செயலக செயலாளராக பதவியுயர்வு பெற்றுச்சென்ற நிலையில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே சி.சத்தியசீலன் பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரால் பருத்தித்துறை பிரதேசசெயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.