Jet tamil
இலங்கை

வரலாறு காணாத மக்கள் வெள்ளத்தின் மத்தியில் நிறைவு பெற்றது பொத்துவில் – பொலிகண்டி பேரணி…

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழிப் போராட்டம் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்குபற்றுதலுடன் இன்று மாலை வெற்றிரமாக நிறைவடைந்துள்ளது.கடந்த 3ம் திகதி பொத்துவில் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம், கிழக்கு மாகாணம் முழுவதும் பயணித்து, பின்னர் வடக்கு மாகாணத்தில் போராட்டத்தை நிறைவு செய்துள்ளது.

தமிழர்களின் நிலஆக்கிரமிப்பு, வடக்கு மற்றும் கிழக்கு பௌத்த மயமாக்கல், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் விவகாரம், முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்கம், மலையக மக்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்வு உள்ளிட்ட மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழர்களினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்திற்கு, முஸ்லிம் மக்களும் தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.அகிம்சை வழியில் நடத்தப்பட்ட போராட்டம் மிகவும் வெற்றியளித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தை நினைவு கூரும் வகையில், பொலிகண்டியில் கல்லொன்றை நாட்டுவதற்கு திட்டமிட்ட போதிலும், குறித்த கல்லை சிலர் திருடியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியன் தெரிவித்தார்.இது ஒரு சதி முயற்சி எனவும் இந்தப்போராட்டம் வெற்றியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

புகையிரத விபத்தில் இருவர் உயிரிழப்பு!

kajee

மதுவரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

kajee

யாழில் இடம்பெற்ற சர்வதேச குடும்ப நல உத்தியோகத்தர் தின நிகழ்வு…!

Sinthu

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வில் கெருடபுராணம் எனும் தலைப்பில் ஆண்மீக உரை

Sinthu

இளம் தலைவர்களை ஒன்றிணைத்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்பத் தயார்! சந்திரிக்கா அதிரடி அறிவிப்பு

jettamil

வடக்கு மாகாண துறைசார் வல்லுநர்களுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டி

jettamil

Leave a Comment