விடுதலைப்புலிகளின் தங்க ஆபரண புதையல் அகழ்வு பணிகள்
விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட தங்க ஆபரண புதையல் தொடர்பில் நேற்று அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸாரால் கடந்த 16ம் திகதியன்று குறித்த அகழ்வு பணிக்கான அனுமதி நீதிமன்றில் கோரப்பட்ட நிலையில், மன்றின் அனுமதியுடன் நேற்று அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட விசுவமடு – குமாரசாமிபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான காணி ஒன்றிலேயே விடுதலைப்புலிகள் அமைப்பினால் யுத்த காலப்பகுதியில் தங்க ஆபரணங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்த நிலையில் நேற்று பகல் 2.30 மணியளவில் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது நீதவான், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், கிராம சேவையாளர், உள்ளிட்டோர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட குறித்த அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.