விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் எடில்ஸி, எஹான், மனீஷா கொய்ராலா ஆகியோர் இணைந்த நடிப்பில் வெளிவரவுள்ள படம் ‘99 ஸாங்ஸ்’
இந்த ‘99 ஸாங்ஸ்’ திரைப்படம் தான் தனது கனவுத் திரைப்படம் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 6 ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.
அத்துடன் இந்த திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்ததோடு அவரே கதையும் எழுதி இருக்கிறார்.
விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் இந்த திரைப்படம், 2015 ஆம் ஆண்டு அளவில் தொடங்கப்பட்டது.
இந்த படத்தில் எடில்ஸி, இஹான், மனீஷா கொய்ராலா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் 14 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
இந்த பாடல்கள் அனைத்தும் முன்பே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில்தான் தற்போது , ‘99 ஸாங்ஸ்’ திரைப்படம் எப்போது வெளியாகும் என ஏ.ஆர்.ரகுமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதன்படி இந்த திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் 16-ஆம் திகதி வெளிவரும் என அவர் தெரிவித்துள்ளார்.
இசையை மையப்படுத்தி உருவாகி உள்ள இந்த திரைப்படத்தை ஜியோ ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்தது, ஏ.ஆர்.ரகுமான் தயாரித்துள்ளார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.