நாடு முழுவதும் வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து செல்வதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண கருத்தொன்றை தெரிவித்துள்ளார்.
நாட்டில் நேற்றைய தினத்தில் (23ம் திகதி) மட்டும் ஏற்பட்ட வீதி விபத்துக்களின் காரணமாக 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இவர்கள் 11 வீதி விபத்துக்களினாலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் இந்த சம்பவங்களில் 08 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் 02 பாதசாரிகள் மற்றும் 02 வாகன பயணிகளும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.