அரசின் புதிய திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு அற்ற இளைஞர்களுக்கு 30,000/- கொடுப்பனவுடன் இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது.
குறைந்த அளவு வருமான கொண்ட குடும்பங்களின் 18-45 வரையான வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கான திறன் அபிவிருத்தி பயிற்சிக்கான வாய்ப்பு 2021-2030 திட்டம்.
கம்பி வேலை கலைஞர்கள், தச்சு வேலை கலைஞர்கள், மேசன் கலைஞர்கள், டயில்ஸ் வேலை கலைஞர்கள் மற்றும்
குழாய்கள் தொடர்பான செயற்பாடுகள் போன்ற துறைகளைச் சேர்ந்தோருக்கு வேலைத்தள பயிற்சி.
இதற்காக இரண்டு சீருடைகளுடன் 3 மாதம் 30,000 ரூபாய்க் கொடுப்பனவு மற்றும் வேலைத்தள பயிற்சியுடன் தேவையான கையேடு மற்றும் கருவிகளுக்காக ரூபா.5,000 கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
இத் திட்டத்தில் இணைக்கப்படுபவர்களுக்கு
உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் அங்கீகாரம் பெற்ற CIDA சான்றிதழுடன், தேசிய திறன் அபிவிருத்தி தகைமை சான்றிதழ்களும் (NVQ) வழங்கப்படவுள்ளது.
இதற்காக எதிர்வரும் மார்ச் – 15ஆம் திகதி வரை மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப முடியும்.
எனவே தேவையான இளைஞர்கள் கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்து, விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ளவும்.
இந்த தகவல்களை மற்றவர்கள் பயன்பெற பகிர்ந்து கொள்ளுங்கள்.
விண்ணப்பம் : Download