அரச ஊழியர்கள் அல்லாத குறைந்த அளவு வருமானம் ஈட்டுபவர்களுக்கு ரூபாய் 5,000 கொடுப்பனவை மீண்டும் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
எதிர்வரும் சில நாட்களில் கொடுப்பனவு வழங்கப்படும் என்றும், இதை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஒருங்கிணைப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது நிலவும் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், சமுர்த்தி பெறுநர்கள் மற்றும் முதியோர் கொடுப்பனவாகவும் ரூபாய் 5,000 கொடுக்கப்படும் என்றார்.
நாட்டில் கொரோனா தொற்றுநோயால் உருவாகியுள்ள பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் முந்தைய சந்தர்ப்பங்களில் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு ரூ .5,000 கொடுப்பனவை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.