சரசாலையில் கசிப்புடன் கைதான 15 வயதுச் சிறுவன்!
இன்றையதினம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சரசாலை பகுதியில் 4 லீற்றர் 500 மில்லிலீட்டர் கசிப்புடன் 15 வயதுச் சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
குறித்த சிறுவன் கசிப்பினை எடுத்து சென்றவேளை, சாவகச்சேரி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஜெயரூபன் தலைமையிலான குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சிறுவன் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளான்.