யாழில் முருங்கைகாய் விலை சடுதியாக அதிகரிப்பு – ஒரு முருங்கை காய் 1000 ரூபா
சந்தையில் மரக்கறிகளின் விலை உயர்வினால் யாழ்ப்பாண வாரச்சந்தையில் ஒரு கிலோ கிராம் முருங்கைக்காயின் சில்லறை விலை 3,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இந்த நாட்களில் முருங்கை அறுவடை கிடைக்காததாலும், ஏனைய வகை மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாலும், முருங்கையின் விலையும் அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண மரக்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விலைகளின்படி யாழ்ப்பாணத்தில் முருங்கைக்காய் ஒன்றின் விலை 1,000 ரூபாவாகும்.
வீதிகளில் கால்நடைகளை கட்டினால் சட்ட நடவடிக்கை – வலி. மேற்கு பிரதேச சபை எச்சரிக்கை
யாழ்ப்பாணத்தில் ஒரு கிலோ கிராம் முருங்கைக்காயின் மொத்த விலை 2,500 ரூபாவாக காணப்பட்டதுடன், யாழ்ப்பாணத்திலிருந்து பல மாகாணங்களுக்குச் செல்லும் பேருந்துகளிலும் முருங்கைக்காய் மூட்டைகள் ஏற்றப்பட்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.
அதுமட்டுமல்லாது எனைய மரக்கறிகளின் விலைகளும் பாரிய அளவில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.