சீமெந்து ஏற்றி வந்த லொறி நல்லூருக்கு அருகாமையில் விபத்து!
பருத்தித்துறை வீதியூடாக யாழ்ப்பாணம் நகர் நோக்கி பயணித்த சீமெந்து ஏற்றும் லொறி நல்லூர் ஆலயத்துக்கு முன்பாக உள்ள வளைவில் திரும்பும் போது அங்கிருந்த கடை கட்டத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் லொறியின் முன்பக்கம் கடுமையாக சேதமடைந்ததுடன் கடையும் சேதமடைந்துள்ளது.
லொறியின் சாரதி காயங்களுக்கும் உள்ளாகியுள்ளார். இச்சம்பவம் இன்று (7) 10.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணையினை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்