Jet tamil
இலங்கை

வாக்கினை பெற்று விட்டு காலை வாரிய சஜித் – சாலக்சன் குற்றச்சாட்டு!

IMG 20241028 WA0007

வாக்கினை பெற்று விட்டு காலை வாரிய சஜித் – சாலக்சன் குற்றச்சாட்டு!

வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கு மாத்திரமே கடற்றொழிலாளர்களின் குடும்பங்களை தேடி வருகின்றனர். வென்ற பின்னர், கடற்றொழிலாளர்கள் குடும்பங்களை மறந்து செல்கின்றனர். அதனாலயே உங்களில் இருந்து உங்கள் தோழனாக நான் போட்டியிடுகிறேன் என ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் ஞானப்பிரகாசம் சுலக்சன் தெரிவித்துள்ளார்.

நல்லூர் தேர்தல் தொகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

சரியாக நாங்கள் சிந்தித்து செயற்பட கூடிய காலமும் நேரமும் தற்போது எங்களுக்கு கிடைத்துள்ளது. அனைவரும் சிந்தித்து வாக்களிக்கும் போதே வெற்றி கிட்டும் .

குறிப்பாக கடந்த காலங்களில் கடற்றொழிலாளார்களிடம் ஏனைய வேட்பாளர்கள் வந்து எமது வாக்குகளை பெற்று செல்வார்கள். வாக்கு கேட்க வரும் போது , கையை கொடுத்து கட்டியணைத்து செல்வார்கள். வென்ற பின்னர் அவர்கள் எங்கே சென்றார்கள் என எங்களில் யாருக்கும் தெரியாது.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நாம் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவு வழங்கினோம். பெரும்பாலான வாக்குகளை நாம் பெற்றுக்கொடுத்தோம். நாடாளுமன்ற தேர்தலின் போது , அவர் எங்களுக்கு ஆசனம் கூட தரவில்லை இதுதான் கடற்றொழிலாளர்கள் சமூகத்திற்கு காலம் காலமாக அரசியல்வாதிகள் செய்து வரும் நம்பிக்கை துரோகம் என மேலும் தெரிவித்தார்.

Related posts

இன்றைய (06.12.2024) இரண்டாவது நாள் இடைக்கால பாதீட்டுத் திட்ட விவாதம் – நேரலை

jettamil

பசில் அமெரிக்காவில் இருந்து திரும்பவில்லை – SLPP இல் பதவி மாறுதல் விவாதங்கள்

jettamil

இன்று முதல் எரிபொருள் விலைகள் மாற்றம்!

jettamil

மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை உடனே கைது செய்ய கடும் அழுத்தம்

jettamil

மட்டக்களப்பில் சர்வதேச எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்

jettamil

முடங்கிய லாஃப் எரிவாயு விநியோகம் – அரசாங்கத்தின் கடும் எச்சரிக்கை

jettamil

Leave a Comment