சந்தையில் கோதுமை மா மாஃபியா ஒன்று இயங்கி வருவதாக இலங்கையின் அனைத்து சிறு கைத்தொழில்துறையினரும் கூறுகின்றனர்.
அதனை தடுத்து நிறுத்த அரசாங்கம் தலையிட வேண்டும் என சிறு கைத்தொழில் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நிருக்ஷ குமார நேற்று (04) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தற்போதைக்கு கோதுமை மாவின் விலையை அதிகரிக்க எந்த காரணமும் இல்லை என நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.