ஏறாவூர் மீரா பாலர் பாடசாலையின் பரிசளிப்பு விழாவும், கலை நிகழ்வும்
ஏறாவூர் மீரா பாலர் பாடசாலையின் பரிசளிப்பு விழாவும், கலை நிகழ்வும் இன்று ஏறாவூர் அறபா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
ஏ.எல்.எம் நிப்றாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் ஏறாவூர் நகரசபை தவிசாளரும், சிறீலங்கா முஸ்ஸிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான அல்ஹாஜ் எம்.எஸ்.எம். நழீம் அவர்களும், கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம் முபாஸ்தீன்,
முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.எம் நஸீர், முன்பள்ளி இணைப்பாளர் ஹாஜியானி சக்கினா பௌசுல், ஏறாவூர் நகர கலாச்சார நிலையப் பொறுப்பதிகாரி எம்.எம் மக்பூல், சிறப்பு அதிதிகளாக திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம் நஸீர், அபிவிருத்தி உத்தியோகத்தர் சாகுல் ஹமீட், முன்பள்ளி பாலர் பாடசாலை ஆசிரியைகளான திருமதி றிபாயா லாபீர், திருமதி சஜீரா அஜ்மீர், திருமதி சிறீன் பர்ஹானா றவூப், உட்பட மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
முன்பள்ளி மாணவர்களுக்கு கலந்து கொண்ட அதிதிகளால் சான்றிதழ்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம் பெற்றதோடு பிரதம அதிதி அவர்களினால் முன்பள்ளி ஆசிரியைகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இம்மாணவச் செல்வங்களின் நலன் கருதி இயன்ற பல உதவிகளை செய்துள்ளேன் அதே போல் எதிர்காலத்தில் இம் மாணவர்களின் நலன் கருதி தன்னிடம் வேண்டிக் கொண்ட அனைத்து விடயங்களிலும் கவனம் செலுத்தி அனைத்தையும் பெற்றுக் கொடுக்க நவடடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.