Jet tamil
இலங்கைமுக்கியச் செய்திகள்

வாக்களிக்கும் முறைமை பற்றி அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு

IMG 20241025 WA0362

வாக்களிக்கும் முறைமை பற்றி அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு

தபால் மூலம் வாக்களிக்கவுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு வாக்களிக்கும் முறைமை பற்றி – ஒவ்வொரு திணைக்களங்களையும் சேர்ந்த பதவிநிலை உத்தியோகத்தர் ஒருவருக்கு தெளிவுபடுத்துவதற்கான செயலமர்வு இன்றைய தினம் (25.10.2024) பி. ப 03.15 மணிக்கு அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் தலைமையுரையாற்றிய தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள் கடந்த சனாதிபதித் தேர்தலில் போது செல்லுபடியற்ற வாக்குகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகமாக காணப்பட்டது எனவும், ஆதலால் மாவட்ட ரீதியில் இவ் எண்ணிக்கையினை குறைக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதால், இவ் தெளிவூட்டலை சரியாகப் பெற்று ஒவ்வொருவரும் தான் சார்ந்த திணைக்களத்தில் கடமையாற்றுகின்ற சகல உத்தியோகத்தர்களையும் அழைத்து தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொண்டார். மேலும் பொது மக்களுக்கான வாக்களிப்பு முறைமை பற்றிய தெளிவுபடுத்தலானது பிரதேச செயலக ரீதியாக பிரதேச செயலர்களின் வழிகாட்டுதலில் உதவிப் பிரதேச செயலாளர், நிர்வாக கிராம அலுவலர் தலைமையில் வெளிக்கள உத்தியோகத்தர்கள் மூலம் கிராமங்களில் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவத்தாட்சி அலுவலர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.

வாக்களிப்பு முறைமை பற்றி உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ.கி.அமல்ராஜ் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது. மேலும் காணொளி மூலமும் காட்சிப்படுத்தி விளக்கமளிக்கப்பட்டது.

இச் செயலமர்வில் ஒவ்வொரு திணைக்களங்களிருந்தும் பங்குபற்றிய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.

Related posts

இன்றைய (06.12.2024) இரண்டாவது நாள் இடைக்கால பாதீட்டுத் திட்ட விவாதம் – நேரலை

jettamil

பசில் அமெரிக்காவில் இருந்து திரும்பவில்லை – SLPP இல் பதவி மாறுதல் விவாதங்கள்

jettamil

இன்று முதல் எரிபொருள் விலைகள் மாற்றம்!

jettamil

மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை உடனே கைது செய்ய கடும் அழுத்தம்

jettamil

மட்டக்களப்பில் சர்வதேச எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்

jettamil

முடங்கிய லாஃப் எரிவாயு விநியோகம் – அரசாங்கத்தின் கடும் எச்சரிக்கை

jettamil

Leave a Comment