தேர்தலின் இறுதி முடிவுகள் குறித்து கருத்து
யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி சார்பில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் ஒரு உறுப்பினர், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் ஒரு உறுப்பினர், மற்றும் சுயேட்சை குழு 17 சார்பில் ஒரு உறுப்பினர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி சார்பில் கருணநந்தன் இளங்குமரன், சண்முகநாதன் பவானந்தராஜா, ஜெயச்சந்திரமூர்த்தி ராஜீவன் ஆகியோர், இலங்கை தமிழரசு கட்சி சார்பில் சிவஞானம் ஸ்ரீதரன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும் சுயேட்சை குழு 17 சார்பில் ராமநாதன் அர்ஜுன் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.