Jet tamil
இலங்கை

500 க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு விசேட விலைக்கழிவு – வெளியானது மகிழ்ச்சியான அறிவிப்பு

மேலும் மூன்று அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த வாரம் 12 பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு மேலதிகமாக இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய 425 கிராம் டின் மீன் ஒன்றின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டு, 490 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

பெரிய வெங்காயம் ஒரு கிலோ 22 ரூபாவால் குறைக்கப்பட்டு, 97 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

கோதுமை மா ஒரு கிலோ 10 ரூபாவால் குறைக்கப்பட்டு, 225 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

இன்று (07) முதல் அமுலாகும் வகையில் இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர 500-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு விசேட விலைக்கழிவுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

சுன்னாகம் பகுதியில் போலீசாரின் கொடூர தாக்குதல்

kajee

ஜனாதிபதி துயிலும் இல்லங்களில் இருந்து இராணுவத்தை அகற்ற வேண்டும் – பொன்.சுதன் கோரிக்கை!

kajee

காகம் சங்கைப் பார்த்து கறுப்பு என்றது – கடுமையாக சாடிய சுரேந்திரன்!

kajee

மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து தப்பிச் சென்ற 9 இலங்கை தமிழர்கள்

kajee

மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன்

kajee

ஸ்கந்தா ஆரம்ப பாடசாலையில் புதிய திறன் வகுப்பறை திறப்பும் மாணவர்களின் கண்காட்சியும்

Sinthu

Leave a Comment