ஆலய பிணக்கு காரணமாக யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதம்
ஆலய பிணக்கு ஒன்றினை அடுத்து, வலி.மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் வே.சச்சிதானந்தம் (தம்பா) நீராகாரம் ஏதுமின்றி கடந்த திங்கட்கிழமை காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அகில இலங்கை சைவ மகா சபை மற்றும் தமிழ் சைவ பேரவையினரால் வழங்கபட்ட வாக்குறுதிக்கு அமைவாக உண்ணாவிரதம் இன்று காலை நிறைவு செய்யப்பட்டுள்ளது.
சுழிபுரம் மத்தி கறுத்தனாந்தோட்டம் துர்க்கை அம்மன் ஆலயத்தில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்டுள்ள பிணக்கினைத் தீர்த்து பொதுக்கூட்டத்தினை நடாத்தாமாறு வலியுறுத்தி குறித்த ஆலயத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை தொடக்கம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
அவரது உடல் நிலையை மோசமடைந்த நிலையில் பல்வேறு தரப்பினரும் பார்வையிட்டு கலந்துரையாடினர் . இருப்பினும் உரிய தீர்வு எட்டப்பட்டால் மட்டுமே உண்ணாவிரதத்தை கைவிடுவார் என அவர் கூறினார்.
உண்ணாவிரதம் தொடர்பாக சச்சிதானந்தன் கூறுகையில்,
மேற்படி ஆலயத்தில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்டுள்ள முரண்பாட்டை அடுத்து வலி.மேற்கு பிரதேச செயலாளரிடம் முறையிட்டேன். 2023.12.07 ஆம் திகதி பிரதேச செயலாளர் தலைமையில் ஆலயத்தில் கூட்டம் ஒன்று நடைபெறும் என பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் துண்டுப்பிரசுரம் ஒட்டினர். எனினும் பின்னர் ஆலயம் பதிவுசெய்யப்படவில்லை எனக் கூறி கூட்டம் நடத்தப்படவில்லை. பின்னர் பிரதேச செயலாளர் இரு தரப்பினரையும் அழைத்து கலந்துரையாடினார்.முன்பும் பிரதேச செயலரது வாக்குறுதிக்கு அமைவாக உண்ணாவிரதத்தை கைவிட்டுச் பொதுகூட்டம் நடாத்தபடவில்லை எமது பொது கூட்டம் கூட்டப்பட்டு நிர்வாகம் தெரிவு செய்யபடவேண்டும் இதுவே எனது வேண்டுகோள் எனவும்
ஆலயம் இந்து கலாசாரத் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாத காரணத்தால் இவ்விடயத்தில் தாம் தலையிட முடியாது எனக்கூறி இணக்கமன்றுக்கு செல்லுமாறு வழிப்படுத்தினார். எனினும் எதிர்த்தரப்பு இணக்கமன்றுக்கு வருகைதராத காரணத்தால் தீர்வைக் காண முடியவில்லை. இதனாலேயே உண்ணாவிரதம் இருக்கின்றேன். – என்றார்.
இந்நிலையில் உண்ணாவிரதம் இருப்பவரின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு இன்று காலை தமிழ் சைவப் பேரவையின் தலைவரும் ஓய்வு நிலை நீதிபதியுமான வசந்தசேனன் ,அகில இலங்கை சைவ மகா சபை பொது செயலர் பரா நந்தகுமார்,பொருளாளர அருள் சிவானந்தன்,முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான ஜெயந்தன், உமாபதி,கிரா அலுவலர்கள் ,பிரதேச வாசிகள் ஆலயத்திற்கு விரைந்து சைவ அமைப்புக்களாகிய நாம் பிரதேச செயலர் மாவட்ட செயலருடன் கலந்துரையாடி கூட்டமொன்றினை நடாத்த நாம் ஏற்பாடு செய்து தருகின்றோம் என வாக்குறுதியளித்து கோவில் குருக்கள் மூலம் நீர் ஆகாரம் வழங்கி உண்ணாவிரதத்தை நிறைவுறுத்தினர்.