நாவலர் மண்டபத்தில் இருந்து யாழ் மாநகர சபை வெளியேறுவதற்கு யாழ் நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் இந்து கலாச்சார திணைக்களம் “ரிட்” மனுத் தாக்கல் நடவடிக்கை எடுத்து வருகிறது.
யாழ். மாநகர சபையை நாவலர் மண்டபத்தில் இருந்து வெளியேறுமாறு வடமாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்த நிலையில் அதனை எதிர்த்து யாழ். மாநகர சபை முன்னால் உறுப்பினர் வரதராஜா பார்த்தீபனால் யாழ் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
வழக்கு நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மன்று, யாழ். மாநகர சபையை நாவலர் மண்டபத்தில் இருந்து வெளியேறும் ஆளுநரின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை உத்தரவை வழங்கியது.
நாவலர் மண்டபத்தின் உரிமம் தங்களுக்கு தான் உரியது என இந்து கலாச்சாரத் திணைக்களம் ஏற்கனவே வலியுறுத்தி வந்த நிலையில் எதிர் வரும் வாரங்களில் குறித்த நீதிமன்றக் கட்டளைக்கு இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களம் ரிட்மனு செய்யவுள்ளது.