Jet tamil
இலங்கைமுக்கியச் செய்திகள்யாழ்ப்பாணம்

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் இடம் பெற்ற முக்கிய கலந்துரையாடல்!

FB IMG 1730591461283

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் இடம் பெற்ற முக்கிய கலந்துரையாடல்!

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள யாழ் மாவட்ட இராணுவ தலைமையகத்தில் நேற்றையதினம் (02.11.2024) வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களுக்கும் யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் பலாலி உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பாகவும், உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்படுகின்ற வீதி, காணிகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் பல்வேறுபட்ட விடயங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் பொதுமக்களுக்கு இராணுவத்தால் வழங்கப்படும் உதவிகள் மற்றும் சேவைகள் தொடர்பான விடைகள் விரிவாக இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் இறுதியில் ஆளுநர் அவர்களால் மரக்கன்று நடுகை மேற்கொள்ளபட்டது. பின்னர் விடுவிக்கப்பட்ட பலாலி – அச்சுவேலி பிரதான வீதியை வடமாகாண ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார்.

FB IMG 1730591458498

Related posts

இன்றைய (06.12.2024) இரண்டாவது நாள் இடைக்கால பாதீட்டுத் திட்ட விவாதம் – நேரலை

jettamil

பசில் அமெரிக்காவில் இருந்து திரும்பவில்லை – SLPP இல் பதவி மாறுதல் விவாதங்கள்

jettamil

இன்று முதல் எரிபொருள் விலைகள் மாற்றம்!

jettamil

மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை உடனே கைது செய்ய கடும் அழுத்தம்

jettamil

மட்டக்களப்பில் சர்வதேச எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்

jettamil

முடங்கிய லாஃப் எரிவாயு விநியோகம் – அரசாங்கத்தின் கடும் எச்சரிக்கை

jettamil

Leave a Comment