Jet tamil
இலங்கைமுக்கியச் செய்திகள்

எரிபொருள் விலை குறித்து வெளியான தகவல்

இம்முறை எரிபொருள் விலை திருத்தமானது, விலைச் சூத்திரத்திற்கு அமைய திருத்தப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெட்ரொலிய கூட்டுத்தாபன அதிகாரிகளுடனான மீளாய்வு கலந்துரையாடலின் பின்னர் இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எரிபொருள் விலையை பாரியளவில் குறைக்க விரும்புகின்ற போதிலும், இலாப நட்ட நிலைமைகளை கருத்திற் கொண்டு எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளதால், ஒரேயடியாக எரிபொருள் விலை குறைக்கப்பட்டால், அது நிதி நிலைமையை பாதிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் வலுவடையும் நிலையில், எரிபொருள் விலையில் மேலும் சலுகைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

அத்தோடு, நேற்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்ய இலங்கை பெட்ரோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புகையிரத விபத்தில் இருவர் உயிரிழப்பு!

kajee

மதுவரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

kajee

யாழில் இடம்பெற்ற சர்வதேச குடும்ப நல உத்தியோகத்தர் தின நிகழ்வு…!

Sinthu

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வில் கெருடபுராணம் எனும் தலைப்பில் ஆண்மீக உரை

Sinthu

இளம் தலைவர்களை ஒன்றிணைத்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்பத் தயார்! சந்திரிக்கா அதிரடி அறிவிப்பு

jettamil

வடக்கு மாகாண துறைசார் வல்லுநர்களுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டி

jettamil

Leave a Comment