Jet tamil
இலங்கை

யாழ். மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமையில் – கோப்பாய் பிரதேச செயலகம் முன்னனியில்

யாழ். மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமை நிலையில் உள்ளதாக யாழ். மாவட்ட செயலகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா இடர் காலத்துக்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார நிலைமை காரணமாக பல கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களில் கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 370 கர்ப்பிணிப் பெண்கள் வறுமை நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாருத்தித் துறைப் பிரதேச செயலகத்தில் 226 கர்ப்பிணிப் பெண்களும், சங்கானைப் பிரதேச செயலகத்தில் 157 கர்ப்பிணிகளும், தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் 139 கர்ப்பிணிகளும், யாழ்ப்பாணா பிரதேச செயலகப் பிரிவில் 138 கர்ப்பிணிகளும், கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவில் 128 கர்பிணிகளும்,

சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 118 கர்ப்பிணிகளும், உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் 117 கர்ப்பிணிகளும், மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவில் 98 கர்பிணிகளும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 97 கர்ப்பிணிகளும், நல்லூர் பிரதேச செயலகப் பிரிவில் 91 கர்பிணிகளும், காரைநகர் பிரதேச செயலகப் பிரிவில் 40 கர்ப்பிணிகளும்,

வேலணைப் பிரதேச செயலகப் பிரிவில் 49 கர்பிணிகளும், ஊர்காவற்துறை பிரதேச செயலகப் பிரிவில் 25 கர்பிணிகளும், நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் 21 கர்ப்பிணிகளும், ஆக 1814 பேர் வறுமை நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதே நேரம் அரசாங்கத்தினால் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் 2ஆயிரம் ரூபா கொடுப்பனவு 8 மாதங்களுக்கு மேலாக வழங்கப்படாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சுழிபுரத்தில் சுமந்திரனின் கூட்டத்தில் குழப்பம் – தலையிட்ட பொலிஸார்!

kajee

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்து இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

kajee

ரவிராஜ் அவர்களது நினைவேந்தல்

kajee

சுமந்திரன் ஜனாதிபதி அநுரகுமாரிடம் விடுத்த பகிரங்க கோரிக்கை

jettamil

சுன்னாகம் பகுதியில் போலீசாரின் கொடூர தாக்குதல்

kajee

ஜனாதிபதி துயிலும் இல்லங்களில் இருந்து இராணுவத்தை அகற்ற வேண்டும் – பொன்.சுதன் கோரிக்கை!

kajee

Leave a Comment

plugin | Job | Job | jobs | Submit anchor text | Submit anchor text | debt consolidation | Submit anchor text | Submit anchor text | Submit anchor text | Submit anchor text | Submit anchor text | Submit anchor text |