யாழ்.நீர்வேலியில் வீடு புகுந்து கொள்ளை
யாழ் நீர்வேலியிலுள்ள ஆசிரியரொருவரின் வீட்டினுள் சென்ற கொள்ளையர்கள் தங்கச் சங்கிலி பணம் என்பவற்றை அபகரித்துச் சென்றுள்ளனர்.
நேற்று (09) அதிகாலை வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டினுள் புகுந்த இனம் தெரியாதோர் உறங்கிக் கொண்டிருந்த ஆசிரியரொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்ததுடன் ஒரு தொகை பணத்திணையும் சூறையாடிச் சென்றுள்ளனர்.
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்ட நிலையில் பொலிசார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கணவன் மனைவி இருவரும் ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.