கோப்பாய் பொலிஸ் பிரிவில் கசிப்புடன் நால்வர் கைது
யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தலமையில் இயங்கும் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருநெல்வேலி சந்தையில் செருப்பு தைப்பவர் கசிப்பு வியாபாரத்தில் மறைமுகமாக ஈடுபட்டிருக்கும் பொழுது யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் அவரை கைது செய்தனர்.
இந்நிலையில் அவரை விசாரித்தபோது, அவர் இன்னொரு இடத்தில் தொகையாக கசிப்பினை வாங்கி வந்து தினமும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
பின்னர் கோப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் உதவியுடன் விற்பனை செய்யும் இடத்தை சுற்றிவளைத்த பொழுது கோப்பாய் மத்தி சூசியப்பர் கோவிலடியில் பெண்ணொருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து 19லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைக்காக அவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டுள்ளனர்.