தொழில்நுட்ப வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா – வடக்கு ஆளுநர் கலந்து சிறப்பிப்பு
தொழில்நுட்ப வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் – கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் செயலக கேட்போர் கூடத்தில் வடக்கு மாகாண இலங்கை தொழில்நுட்பவியல் சேவையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், பிரதம செயலாளர் எஜ்.எம்.சமன் பத்துலசேன, வடக்கு மாகாண பொறியியல் சேவைகள் முன்னாள் பிரதிப்பிரதம செயலாளர் சோ.சண்முகானந்தன், வடக்குமாகாண கட்டடங்கள் திணைக்கள முன்னாள் மாகாணப் பணிப்பாளர் செ.மோகனதேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ருந்தனர்.