Jet tamil
இலங்கை

திருமலையில் 10 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டிருக்கும் மருத்துவ நிலையம்…

திருமலையில் 10 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டிருக்கும் மருத்துவ நிலையம்

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட மஜீத் நகர் டீ சந்தியில் உள்ள மருத்துவ நிலையம் பல வருட காலமாக பாழடைந்த நிலையில் காணப்பட்டது.

குறித்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு திறப்பு விழா மட்டுமே இடம்பெற்ற நிலையில் இது வரை அதன் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவில்லை.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் ,குழந்தைகளுக்கான நிறை போசாக்கு தொடர்பிலான சிகிச்சைகளுக்கு பல கிலோ மீற்றர் தூரம் செல்ல வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை கருத்திற் கொண்டு குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஊடாக மீள் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.எம்.அஜீத் குறித்த கட்டிடத்தை பார்வையிட்டதுடன் எதிர்வரும் வாரமளவில் மீள இயங்க செய்வதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புகையிரத விபத்தில் இருவர் உயிரிழப்பு!

kajee

மதுவரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

kajee

யாழில் இடம்பெற்ற சர்வதேச குடும்ப நல உத்தியோகத்தர் தின நிகழ்வு…!

Sinthu

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வில் கெருடபுராணம் எனும் தலைப்பில் ஆண்மீக உரை

Sinthu

இளம் தலைவர்களை ஒன்றிணைத்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்பத் தயார்! சந்திரிக்கா அதிரடி அறிவிப்பு

jettamil

வடக்கு மாகாண துறைசார் வல்லுநர்களுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டி

jettamil

Leave a Comment