Jet tamil
இலங்கை

இங்கிணியாகல குளத்தினை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

பொத்துவில் பிரதேசத்தில் அமைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதேசத்தில் கட்சியின் செயற்பாடுகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பாக கட்சி செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடினார்.

இதனிடையே இங்கிணியாகல குளத்தினை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த குளத்தில் மீன் பிடித் தொழில் மேற்கொள்வதை ஜீவனோபாயமாகக் கொண்டு வாழ்வோரின் எதிர்பார்ப்புக்களை கேட்டறிந்ததுடன் அவற்றினை நிறைவேற்றுவது தொடர்பாகவும் அமைச்சர் ஆராய்ந்துள்ளார்.

இதேவேளை நக்டா எனப்படும் தேசிய நீரியல் வளங்கள் அபிவிருத்தி அதிகார சபையினால் இங்கிணியாகலவில் செயற்படுத்தப்படுகின்ற நன்னீர் மீன் குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்காணிப்பு விஜயம் ஒன்றையும் அமைச்சர் மேற்கொண்டிருந்தார்.

அத்துடன் அறுகம்பை பிரதேச கடற்றொழிலாளர்களினால் பயன்படுத்தப்படுகின்ற இறங்கு துறையை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதேசக் கடற்றொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய நிரந்தர இறங்கு துறையை அமைப்பது தொடர்பாகவும் ஆராய்ந்தறிந்துள்ளார்.

இந்நிலையில் பொத்துவில், ஜலால்தீன் சதுக்கம் எனப்படும் கடற்கரை பகுதிக்கு திடீர் விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சட்டவிரோதமான முறையில் பிரதேச கடற்றொழிலாளர்கள் கரைவலைத் தொழிலை மேற்கொள்வதை கண்டித்ததுடன், குறித்த சட்ட விரோத தொழில் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுமாயின் உரிய சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்

இந்நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மக்கள் நலன் சார்ந்த வேலைத் திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் புதுத்தெம்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், மாவட்டத்திற்கான கட்சியின் தலைமைக் காரியாலயம் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சுழிபுரத்தில் சுமந்திரனின் கூட்டத்தில் குழப்பம் – தலையிட்ட பொலிஸார்!

kajee

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்து இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

kajee

ரவிராஜ் அவர்களது நினைவேந்தல்

kajee

சுமந்திரன் ஜனாதிபதி அநுரகுமாரிடம் விடுத்த பகிரங்க கோரிக்கை

jettamil

சுன்னாகம் பகுதியில் போலீசாரின் கொடூர தாக்குதல்

kajee

ஜனாதிபதி துயிலும் இல்லங்களில் இருந்து இராணுவத்தை அகற்ற வேண்டும் – பொன்.சுதன் கோரிக்கை!

kajee

Leave a Comment

plugin | Job | Job | jobs | Submit anchor text | Submit anchor text | debt consolidation | Submit anchor text | Submit anchor text | Submit anchor text | Submit anchor text | Submit anchor text | Submit anchor text |