சர்வதேச பாதுகாப்பிற்க்கு செல்லவுள்ள கடற்படை இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த தயங்குகிறது -செ.நற்குணம்
சர்வதேச பாதுகாப்பிற்கு செல்லும் கடற்படை ஏன் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த தயங்குகிறது என யாழ்மாவட்ட கிராமிய மீனவர் அமைப்புக்களின் சம்மேன தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
எல்லைமீறி இலங்கை கடற்பரப்பில் தொழிலில் ஈடுபடும் இந்திய இழுவைமடி படகுகளை கட்டுப்படுத்த தயங்கும் கடற்படை சர்வதேச பாதுகாப்பிற்க்கு செல்கிறது.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிப்பதும் வேதனையளிப்பதாகவும், எமது வாழ்வாதரத்தையும், எமது வளங்களை அழித்துக் கொண்டிருப்பவர்களை அவ்வாறு அழிப்பதிலிருந்து கட்டுப்படுத்தாது விடுவிப்பதுதான் கவலையளிக்கிறது.
இந்திய இலங்கை அரசுகள் பேசி இவ்வாறான அழிவுகளிலிருந்து பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தபின்னர் விடுப்பது ஒரு மனிதாபிமான நடவடிக்கை என்றும் தெரிவித்ததுடன் அண்மையில் வடக்கிற்க்கு விஜயம் செய்த ஐனாதிபதி மீனவர் பிரச்சினை தொடர்பில் பேசுவதற்காக மீனவ அமைப்புக்களை அழைத்திருந்தபோதும் அது பேசப்படவில்லை. வெளிநாட்டு படகுகள் இலங்கையில் அனுமதி பெற்றுவந்து தொழிலில் ஈடுபடுவதை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.