க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான கல்வி வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகள் நடத்தப்படுவது இன்று (23) நள்ளிரவு முதல் தடை செய்யப்படுகின்றதென அறிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சைக்கான கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகளை நடத்துவது பரீட்சை முடியும் வரை தடை செய்யப்படுகின்றதென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள்கள் அடங்கிய ஆவணங்களும் அச்சிட்டு விநியோகிப்பதும் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்வரும் விடயம் தொடர்பான விதி மீறல்கள் நடப்பதை பொது மக்கள் அறிந்தால் பொலிஸார் அல்லது பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்க வேண்டும் என்றும், 2020 O/L பரீட்சை மார்ச் 1 ஆம் திகதி தொடங்கி 10 ஆம் திகதி நிறைவடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.