உச்சத்தை எட்டியுள்ள மாம்பழ விளைச்சல்
வருடாந்த மாம்பழத்தின் விளைச்சல் உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டு மாம்பழ அறுவடை 250 மில்லியனை தாண்டியுள்ளதாக விவசாயத் திணைக்களம் குறிப்பிடுகிறது.
ஒரு கிலோ TEJC மாம்பழம் 800 முதல் 1000 ரூபா வரையில் இருந்த போதிலும், அதிகளவான மாம்பழ அறுவடை காரணமாக சந்தையில் ஒரு கிலோ TEJC மாம்பழத்தின் விலை 400 முதல் 500 ரூபா வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.