இளம் தலைவர்களை ஒன்றிணைத்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்பத் தயார்! சந்திரிக்கா அதிரடி அறிவிப்பு
இளம் தலைவர்களை ஒன்றிணைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மீளக் கட்டியெழுப்பவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்
இலங்கை மன்றக்கல்லூரியில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மீள கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகவே உள்ளேன்.
சுயலாபம் கருதி ஏதேனும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் ஊடாக ஆட்சிக்கு வருவதற்கே இன்று பலரும் முயற்சிக்கின்றனர்.
நாடு தொடர்பாகவும் நாட்டுமக்கள் தொடர்பாகவும் அக்கறையில்லாத சிலர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறான சுயலாப அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை.
நாம் நாடு தொடர்பில் சிந்தித்தே எனது அரசியல் பயணம் அமைந்தது. இதனால் நான் பலவற்றை இழக்கவும் நேரிட்டது.
இந்த நாட்டின் பொருளாதாரக் கொள்ளையர்கள் என நீதிமன்றத்தினால் நிரூபிக்கப்பட்டவர்கள் இன்று இந்த நாட்டின் பிரதான அமைச்சு பதவிகளை வகிக்கின்றனர்.
இவ்வாறானவர்களுடன் ஒருபோதும் அரசியல் பயணத்தை தொடரமுடியாது. கட்சி உறுப்புரிமையையும் நான் விரும்பவில்லை.
வீழ்ச்சியடைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மீள கட்டியெழுப்புவதற்கு சில காலம் தேவைப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.