2022 இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில், நஷ்டத்தில் இயங்கும் அரசாங்கத்திற்குச் சொந்தமான வர்த்தக நிறுவனங்களை மறுசீரமைப்பதற்காக தனி அலகு ஒன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி முன்மொழிந்திருந்தார்.
இதன்படி, பிரேரணையை அமுல்படுத்துவதற்காக 200 மில்லியன் ரூபாவை இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் உள்ள பல முக்கிய பொது நிறுவனங்கள் அதிக பொது நிதி அபாய நிலையில் உள்ளதால் தொடர்புடைய முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.