விண்வெளிக்கு மீன் குழம்பை எடுத்துச் சென்ற சுனிதா வில்லியம்ஸ்
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ள சுனிதா வில்லியம்ஸ், மீன் குழம்பை தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், 03வது முறையாக விண்வெளி சென்றுள்ளார்.
ஸ்டார்லைனர் விண்வெளி ஓடத்தில், நாசாவை சேர்ந்த விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன் சர்வதேச விண்வெளி நிலையத்தை நேற்று முன்தினம் (06) அவர் அடைந்துள்ளார்.
இதனிடையே நாசா, இந்தியாவைச் சேர்ந்த தனியார் ஊடகத்திடம் தெரிவிக்கையில், “
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு மீன் குழம்பு எடுத்துச் சென்றுள்ளார். இது வீட்டில் இருப்பதைப் போன்ற உணர்வை அவருக்கு தரும்.
அதேநேரம் இந்த முறை சுனிதா வில்லியம்ஸ், தனக்கு விருப்பமான சமோசாவை எடுத்துச் செல்லவில்லை” என தெரிவித்திருக்கிறது.