தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினத்தின் ஆறாம் ஆண்டு நினைவேந்தல்
இன்றையதினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினத்தின் ஆறாம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் அக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் தலைமையில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன் போது சுடர் ஏற்றி, மலர் மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவு உரைகளும் இடம்பெற்றிருந்த்து.
இவ் நினைவேந்தல் நிகழ்வில் கட்சியில் முக்கியஸ்தர்கள் ,ஆதரவாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.