கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வரையான தொடருந்து சேவை இன்று (28) முதல் ஆரம்பமாகியுள்ளது.
கொழும்பு கோட்டையில் இருந்து இன்று அதிகாலை 5.45 மணிக்கு தொடருந்து புறப்பட்டுள்ளதுடன், நாளை 29 ஆம் திகதி காங்கேசன்துறையில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு 10.53 இற்கு யாழ்ப்பாணம் பிரதான தொடருந்து நிலையத்தை வந்தடைந்து, 11 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்படும்.
வடக்கு தொடருந்து பாதையில் தினமும் தொடருந்து பயணிக்கும் என்றும், தொடருந்து கடவைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயல்படுமாறும் தொடருந்து திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.