Jet tamil
இலங்கையாழ்ப்பாணம்

வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் நடைபெற்ற பட்டப் போட்டி!

வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் நடைபெற்ற பட்டப் போட்டி!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு சென்மேரில் விளையாட்டு கழகம் நடாத்தும் மூன்றாவது பட்டத் திருவிழா வணபிதா ஜே. ரமேஸ் தலைமையில் நேற்று (16) இடம்பெற்றது.

முதல் நிகழ்வாக விருந்திரனர்களுக்கு மாலை அணிவித்து, அரங்குவரை அழைத்து வரப்பட்டு அங்கு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

முதல் நிகழ்வாக மங்கல விளக்கு ஏற்றப்பட்டது. சுடர்களை கட்டைக்காடு பங்குத்தந்தை ஏ.அமல்ராஜ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன், மருத்தங்கேணி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பங்குத்தந்தையும், கட்டைக்காட்டை சேர்ந்தவரும், வணபிதாவுமான ரமேஸ், கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழக தலைவர் பி.ரஜித் உட்பட பலரும் ஏற்றிவைத்தனர்.

தேசிய கொடியினை மருதங்கேணி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பு அதிகரி ஏற்றியதை தொடர்ந்து கட்டைக்காடு சென் மேரிஸ் விளையாட்டு கழக கொடியினை அதன் தலைவர் ரெஜித் ஏற்றினார்.

தொடர்ந்து ஆசியுரையை கட்டைக்காடு பங்குதந்தை, ஏ.அமல்ராஜ், வெற்றிலைக்கேணி நாகதம்பிரான் ஆலய பிரதம குரு ஞானசம்மந்தக் குருக்கள் ஆகியோர் நிகழ்த்தினர்.

நிகழ்வை சம்பிர்தாயபூர்வமாக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் போட்டியை சம்பிர்தாயபூர்வமாக தொடக்கிவைத்தார்.

அதனை தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின. இதில் போட்டிகளில் யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி பகுதிகளிலிருந்து பல பட்டக்கள் போட்டிகளில் பங்குபற்றின.

இதில் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டத்திற்க்கான பரிசாக ரூபா 100000/- மும் இரண்டாவது பரிசாக ரூபா 50000/- மும் மூன்றாவது பரிசாக ரூபா 25000 மும், பத்து ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

குறித்த பட்ட போட்டி மூன்றாவது தடவையாக. இடம் பெற்றுவருவது குறிப்பிடதக்கது.

Related posts

புகையிரத விபத்தில் இருவர் உயிரிழப்பு!

kajee

மதுவரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

kajee

யாழில் இடம்பெற்ற சர்வதேச குடும்ப நல உத்தியோகத்தர் தின நிகழ்வு…!

Sinthu

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வில் கெருடபுராணம் எனும் தலைப்பில் ஆண்மீக உரை

Sinthu

இளம் தலைவர்களை ஒன்றிணைத்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்பத் தயார்! சந்திரிக்கா அதிரடி அறிவிப்பு

jettamil

வடக்கு மாகாண துறைசார் வல்லுநர்களுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டி

jettamil

Leave a Comment