வடமராட்சி கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம பொருளால் பரபரப்பு
யாழ் வடமராட்சி கடற்கரைப் பகுதியில் இன்று(13) காலை மர்மப் பொருளொன்று கரையொதுங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
SL 8 என பெயரிடப்பட்ட கொள்கலன் போன்ற அமைப்பை ஒத்த மர்ம பொருளே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது.
கடந்த சில வாரங்களாக வடமராட்சி கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு வகையான மர்மப் பொருட்கள் கரையொதுங்கி வருகின்றது.
இராணுவ உழவு இயந்திரத்துடன் மோதி இளைஞன் உயிரிழப்பு!
குறிப்பாக சில தினங்களுக்கு முன்னர் புத்த பெருமான் அமர்ந்திருக்கக் கூடிய தேர் மிதப்புகள், கடற்கலம் உள்ளிட்ட பல பொருட்கள் கரையொதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.