இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 364 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது!
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக தயார் நிலை வைக்கப்பட்டிருந்த 364 கிலோ கிராம் கேரளா கஞ்சாவும், பைபர் படகொன்றையும் நாகபட்டினம் பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு மூவரைக் கைது செய்துள்ளனர்.
நாகபட்டினம், வேட்டைக்காரனிருப்பு, நாலுவேதபதி பகுதியிலேயே இந்த கஞ்சா நேற்று(18) கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது அக்கரைப்பேட்டை, நாகபட்டினம், வேட்டைக்காரனிருப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.