ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் 2024 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் போட்டி!
ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் 2024 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
கல்லூரி அதிபர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை வங்கி ஊர்காவற்துறை கிளையின் முகாமையாளர் திருமதி பிரமிளா ரமணகிறிஸ்ணா அவர்கள் பிரதம விருந்தினராகவும் ஊர்காவற்துறை கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு. சத்தியசீலன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவனும் அன்னை புத்தகசாலை முகாமையாளருமான திரு. செவ்வேள் விஜிதரன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தார்கள்.