வண்ணை ஸ்ரீ வீரமாகாளி இரதோற்சவம்
வரலாற்றுச் சிறப்புமிக்க வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தின் இரதோற்சவம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கடந்த 01.02.2024 அன்று அலங்கார உற்சவத்துடன் ஆரம்பமாகிய திருவிழாவில் இன்றையதினம் இரதோற்சவமும், எதிர்வரும் 09.02.2024 அன்று தீர்த்தோற்சவமும் இடம்பெற்று, 10.02.2024 மாலை அலங்கார பூந்தண்டிகை உற்சவத்துடன் திருவிழா இனிதே நிறைவடை யும்.
இதில் பல இடங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்துகொண்டு அம்மன் அருட்காட்சத்தினை பெற்றுச் சென்றனர்.