வெடுக்குநாறி விவகாரம்: 6 பேர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைதான எட்டுப்பேரில் 6 பேர் கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரியின் செயற்பாடுகள் தமிழர்களுக்கு எதிரான இனவாத ஒடுக்குமுறைகளை மேற்கொள்ளும் சிறீலங்கா பொலிஸாருக்கு துணைபோவதாக அமைந்துள்ள காரணத்தினாலேயே கொழும்பில் முறைப்பாடு செய்யப்பட்டதாக முறைப்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை அதிகாரத் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட பொலிஸார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்துத் தண்டிக்க வேண்டும் என்பதுடன் எதிர்காலத்தில் இடையூறுகள் இன்றி ஆலய வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான சூழல் உறுதிப்படுத்தப்படல் வேண்டுமெனவும் கோரி மகஜர் ஒன்றும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.