கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று (09) நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
கொழும்பு 01,02,03,04,07,08,09,10 மற்றும் 11 பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தின் கீழ் நீர் விநியோகிக்கப்படுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
நீர் பரிமாற்றம் சீர்குலைந்ததன் காரணமாக இந்த நிலைமை அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்காரணமாக இன்று நண்பகல் 12 மணி வரை உயர் பிரதேசங்களுக்கு வழங்கப்படும் நீர் குறைப்பு மற்றும் மட்டுப்படுத்தப்படுமென நீர் வழங்கல் சபை அறிவித்துள்ளது.
இதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு நீர் வழங்கல் சபை வருத்தம் தெரிவித்துள்ளது.